பருவச் சிறையில்
அடைபட்டு கிடந்தேன்
என்னை
இதய கூண்டுக்கு
இடம் மாற்றினாய்
உருவச் செழிப்பில்
உலவி வந்தேன்
உன்
உள்ள அழகில்
மயக்கி விட்டாய்
உறவுத் திமிரில்
சுற்றித் திரிந்தேன்
என்னை
தாலிக் கயிற்றில்
தனிமை படுத்தினாய்
இரவும் பகலும்
ஆட்சி செய்தாய்
உன்
இல்லத்து அரசியாக
மாட்சிமை தந்தாய்
கற்பின் பெருமையை
காத்து நின்றேன்
என்னை
கருவுறச் செய்து
கெளரவம் அளித்தாய்
குழந்தை பெற்று
தாய் ஆனேன்
உன்
குலம் காக்க
பாடு பட்டாய்
பிள்ளை சிரிப்பில்
ஆனந்தம் கண்டேன்
என்
அன்பு களிப்பில்
பேரின்பம் கண்டாய்
மக்களை வளர்த்து
மக்கள் ஆக்கினேன்
உன்
பேரக் குழந்தைகளுக்கு
பாட்டி ஆக்கினாய்
வாழ்ந்த களைப்பில்
வக்கனையாய் பேசினேன்
என்னை
போற்றி புகழ்ந்து
புவி நீங்கினாய்
எல்லாம்
விட்டுச் சென்றாய்
என் தெய்வமே
எனை விட்டு
நீ மட்டும்
எங்கு சென்றாய் !
Tags: girl,woman,husband,tamil,kavi,kavithai,poem
அடைபட்டு கிடந்தேன்
என்னை
இதய கூண்டுக்கு
இடம் மாற்றினாய்
உருவச் செழிப்பில்
உலவி வந்தேன்
உன்
உள்ள அழகில்
மயக்கி விட்டாய்
உறவுத் திமிரில்
சுற்றித் திரிந்தேன்
என்னை
தாலிக் கயிற்றில்
தனிமை படுத்தினாய்
இரவும் பகலும்
ஆட்சி செய்தாய்
உன்
இல்லத்து அரசியாக
மாட்சிமை தந்தாய்
கற்பின் பெருமையை
காத்து நின்றேன்
என்னை
கருவுறச் செய்து
கெளரவம் அளித்தாய்
குழந்தை பெற்று
தாய் ஆனேன்
உன்
குலம் காக்க
பாடு பட்டாய்
பிள்ளை சிரிப்பில்
ஆனந்தம் கண்டேன்
என்
அன்பு களிப்பில்
பேரின்பம் கண்டாய்
மக்களை வளர்த்து
மக்கள் ஆக்கினேன்
உன்
பேரக் குழந்தைகளுக்கு
பாட்டி ஆக்கினாய்
வாழ்ந்த களைப்பில்
வக்கனையாய் பேசினேன்
என்னை
போற்றி புகழ்ந்து
புவி நீங்கினாய்
எல்லாம்
விட்டுச் சென்றாய்
என் தெய்வமே
எனை விட்டு
நீ மட்டும்
எங்கு சென்றாய் !
Tags: girl,woman,husband,tamil,kavi,kavithai,poem
Good
ReplyDeleteGood
ReplyDeletenice na
ReplyDelete