ரோஜா
மொட்டொன்று
முள் செடியில்
பூத்திருக்கும்
பார்ப்பதற்கு வந்த
பனித்துளிகள்
முத்தமிட்டு
மெய் மறக்கும்
வெட்கத்தில்
சிவந்த இதழ்கள்
பூவாய்
மலர்ந்திருக்கும்
விடியலில்
தோன்றும் வெயில்
விரல்களால்
வருடிச் செல்லும்
இரவுக்குள்
இறக்கப்போவது
நிச்சயம்
இருந்தும்
இனம் புரியாத
ஒரு அச்சம்
இப்படியே
இருந்து
உதிர்ந்து போகலாமா
அப்படியே
விழுந்து
பதியப் போடலாமா
மாலையுடன்
சேர்ந்து
மணந்து சாகலாமா
மங்கையுடன்
கூடி
மணத்து வாடலாமா
விதைகளாகும்
மலர்களாய்
பதப்படுத்த படலாமா
விருந்தாகும்
பூக்களாய்
காட்சியாகி விடலாமா
அதிர்ச்சி
மரணமாய் - ஒரு
அதிகார
கை பறித்து
கசக்கி
எறியப்படுவதும்
கண்ணீர் கலந்த
உண்மை !
Tags: day,roja,tamil,kavi,kavithai,poem
மொட்டொன்று
முள் செடியில்
பூத்திருக்கும்
பார்ப்பதற்கு வந்த
பனித்துளிகள்
முத்தமிட்டு
மெய் மறக்கும்
வெட்கத்தில்
சிவந்த இதழ்கள்
பூவாய்
மலர்ந்திருக்கும்
விடியலில்
தோன்றும் வெயில்
விரல்களால்
வருடிச் செல்லும்
இரவுக்குள்
இறக்கப்போவது
நிச்சயம்
இருந்தும்
இனம் புரியாத
ஒரு அச்சம்
இப்படியே
இருந்து
உதிர்ந்து போகலாமா
அப்படியே
விழுந்து
பதியப் போடலாமா
மாலையுடன்
சேர்ந்து
மணந்து சாகலாமா
மங்கையுடன்
கூடி
மணத்து வாடலாமா
விதைகளாகும்
மலர்களாய்
பதப்படுத்த படலாமா
விருந்தாகும்
பூக்களாய்
காட்சியாகி விடலாமா
அதிர்ச்சி
மரணமாய் - ஒரு
அதிகார
கை பறித்து
கசக்கி
எறியப்படுவதும்
கண்ணீர் கலந்த
உண்மை !
Tags: day,roja,tamil,kavi,kavithai,poem
No comments:
Post a Comment