நான்
கடவுளின் பிள்ளை
என்று
நம்பி இருந்தேன்
யார் அந்த
கடவுள்
என்று தெரியாமல்
குழம்பி நின்றேன்
சிவனைப் பிடிக்கும்
எனக்குள்
கமலக் கண்ணனும்
இருந்தான்
முருகன் துணை
என்றேன்
விநாயகனை வலம்
வந்தேன்
இயேசுவின் கிருபை
கிட்டியதுண்டு
மாதாவின் மணியோசை
கேட்டதுண்டு
அல்லாவை கூட
தொழுதிட
ஆசைப்பட்டேன்
எல்லோரையும்
ஒன்றாக்கி
ஓம்
சக்தி மந்திரத்தை
உருவாக்கினேன்
தாய் தான்
உலகம் என்று
உடன் அழைத்து
உருகி நின்றேன்
என்
நன்மை தீமை
இரண்டையும்
உரிமையுடன்
ஒப்புவித்தேன்
நான்
தவறு செய்தால்
தரும்
தண்டனையை
தாங்கிக் கொண்டேன்
கோயில்
பெரிதென்று
எண்ணவில்லை
என்
மனதில் குடியிருத்தி
மனம் மகிழ்ந்தேன்
நினைத்தாலும்
நினைக்காவிட்டாலும்
வணங்கினாலும்
வணங்கவிட்டாலும்
என்னை
மறந்திட மாட்டாய்
என
மனதார நம்பினேன்
அடிகள்
விழுந்த போதும்
அவை
தடுக்கப்பட்ட போதும்
நான்
உன் மகன்
என்னை
அடிப்பவனும் நீயே
அணைப்பவனும் நீயே
என்று
இருமாத்து நின்றேன்
உன்னை
மனமுவந்து தொழுதேன்
இருந்தும்
அவ்வ போது
நெருடியது
யார் அந்த
சக்தி என்று
சிவனா
கண்ணனா
முருகனா
விநாயகனா
இயேசுவா
அல்லாவா
நான்
மகனென்று நம்பும்
என்
இறைவன் யார்
எந்தையே
உன்
இறப்பிற்கு
பின் தான்
உணர்ந்தேன்
நீ தான்
என் கடவுள்
என்று
நான் என்றும்
உன் மகன்
என்று
அன்றும்
இன்றும்
என்றும்
என்னை
பின் தொடர்வது
உன்
ஆன்ம சக்தியே !