இறுமாப்பு
அடைந்து கொள்
நான்
இத்தனை
சிறுமைப்பட்டு கிடந்தது
உன்னிடம் மட்டும் தான் !
பெருமிதம்
கொண்டு மகிழ்கிறேன்
என்னை
இவ்வளவு
பெரியவனாகியவள்
நீ தான் என்று !
வெட்கி
தலை குனியட்டும்
உன்
முதுமைக்கு
ஒரு தீர்வும்
காணாத உலகம்
கொலைப் பழி
ஏற்கட்டும்
உன்னை
என்
கண் முன்னே
கொன்று சென்ற இயற்கை
என்
கண்ணீரை
துடைக்க வரும்
வெறுமையை கண்டு
திகைக்கிறேன்
உன் குரல்
கேட்பது போன்று !




nice it
ReplyDeleteFrom Dr.Akila minor..nice.congrats..keep it up.
ReplyDeletenice dear siru thirutham(பெரியவனாகியவள்)..
ReplyDelete