Saturday, October 1, 2011

அடிமை தலைகள்

சிந்திப்பதற்கு
சற்று
சிரமமான கருத்து

நிந்திப்பதற்கு
முற்றும்
மாறுபட்ட உண்மை

எந்தவொரு
தவறும் செய்யாமல்
ஏழை
உருவாக்கப் படுகிறான்

ஏழை
என்ற காரணத்தால் 
சகமனிதன்
அடிமையாக்கப் படுகிறான்

வாழ்க்கை ஓட்டத்தில்
பின் தங்கியவர்கள்
எல்லாம்
பிச்சைகாரர்கள் ஆகின்றனர்

வீரர்கள் மட்டுமே 
ஓடத் துணிந்தவர்கள்
என்பதை
உணர்ந்தும் மறக்கிறார்கள் 

இல்லாதவனுக்கு
பிறந்து
ஏழையானவன்

இயலாமை
வந்து
ஊனமானவன்

இருவரும்
இயற்கையால்
ஏமாற்றப்பட்டவர்கள்

இருப்பதை
இழந்து
இல்லாதவன் ஆனவன்

நேர்மையுடன்
ஏமாந்து
வறுமைக்கு வந்தவன்

இருவரும்
ஊர் உலகத்தால்
ஏமாற்றப்பட்டவர்கள்

ஏற ஏற
எட்டி உதைக்கும்
மேலோர்கள்

சறுக்க சறுக்க
ஏறத் துடிக்கும்
ஏழை பங்காளி

தவறோ சரியோ
தன் நிலையை
நிறுத்திக் கொள்ள

நல்லதோ கெட்டதோ
தன் எதிரியை
வீ ழ்த்தி விட

நாவிற் குள்ளே
விடம் வைத்து
நடப்பவர் கோடி

நாகத் தீண்டலை 
விட கொடியது
கொட்டும் வார்த்தை

ஏழை பணக்காரன்
போட்டி நடக்கிறது
நீயா நானா
போட்டி ஆரம்பமாகிறது

மூலதனம்
பதுக்கப் படுகிறது
முறை கெட்ட
ஆட்டம் நடத்தப்படுகிறது

எளியவன்
ஏமாற்றப்படுகிறான்
வலியவன்
ஏமாற்றத் தொடங்குகிறான்

இறுதிவரை
தொடர்ந்து நடக்கிறது
ஏழையாகவே
ஒருவன் இறப்பதற்கு

ஒரு  கட்டத்தில்

தாய் தந்தை
தமையன் தமக்கை
தான்
என்ற உலகம்

மறு கட்டத்தில்

தான்
தாரம் - தன்
மகன் மகள்
என்று மாறிவிடுகிறது

இறுதியில்

பேரன் பேத்தி
மருமகன் மருமகள்
என்று
விரிசலடைகையில்
விவரம் தெரிகிறது

சொந்தத்தையே
சந்தர்ப்பத்தில்
சேர்த்து கொள்ளும்
முட்டாள் மனிதன்

சுற்றத்தை
எப்படி
சுகப்படுத்துவான்

சமுதாயத்தை
எப்படி
சமத்துவமாக்குவன்

சம நிலையில்
உள்ளவர்கள்
கூட்டாளி ஆகிறார்கள்

சம நிலையில்
இல்லாதவர்களை
கடனாளி ஆக்குகிறார்கள்

கொடுக்க
துணிந்தவனிடம்
பணத்தை
கூட்டி வாங்குகிறார்கள்

கொடுக்காமல்
பணிந்தவர்களிடம்
மானத்தை
கூட்டி வாங்குகிறார்கள்

மானபங்கம்
நடத்தப் பட்டதால்
நிகழ்ந்தது தான்
மகாபாரதம்

அடிமை சங்கிலியில்
தீட்டப்பட்டவை
தான்
அர்ஜுனனின் அம்புகள் !