உன்
பூர்வீக கிராமத்தில்
புழுதி மண்ணில்
விழுந்து
புரண்டு கொண்டிருந்தவனை
இறுக
பற்றி எடுத்து
தூசு தட்டி
தோள் மீது ஏற்றி
பள்ளிக்கு அனுப்பினாய்
சிறு பிள்ளை
தனமாய்
தெருவில் சுற்றிய
என்னை
முறைத்துப் பார்த்து
கண்டித்திருக்கிறாய்
கேட்காத போது
தண்டித்திருக்கிறாய்
என்
சின்ன பாதங்கள்
ஏறி ஆடியது
உன் முதுகில்
மட்டும் தான்
என்
பிஞ்சு கரங்கள்
இறுக பிடித்தது
உன் இடுப்பை
மட்டும் தான்
நீருக்குள் முழ்கி
தத்தளித்த என்னை
நீந்தி பிடித்து
கரை சேர்த்தது
நீ தான்
கவலைகள் உன்னை
அலைகழித்த போதும்
கவலைகள் இன்றி
என்னை வளர்த்தது
நீ தான்
சொந்தங்களை விட
சொத்துக்களை விட
என்னை தான்
எண்ணினாய்
மலை போல்
கடன்களை பெற்று
நிலங்களை விற்று
எனக்கு தான்
செய்தாய்
கடல் அளவு
உன்
தங்கங்களை
எனக்களித்து விட்டு
என்
எச்சிலை
உண்டவன் நீ
உன்
காலங்களை
எனக்கழித்து விட்டு
என்
கால்களை
அமுகியவன் நீ
ஒரு
இளைஞனாக
எழுந்து நின்றேன்
உன்னை
கிழவனாக
மாற்றி விட்டு
ஒரு
மனிதனாக
மாறி நிற்கிறேன்
உன்னை
மண்ணுக்குள்
அனுப்பி விட்டு !
Tags: father in my child,life with my father,tamil,kavi,kavithai,poem
பூர்வீக கிராமத்தில்
புழுதி மண்ணில்
விழுந்து
புரண்டு கொண்டிருந்தவனை
இறுக
பற்றி எடுத்து
தூசு தட்டி
தோள் மீது ஏற்றி
பள்ளிக்கு அனுப்பினாய்
சிறு பிள்ளை
தனமாய்
தெருவில் சுற்றிய
என்னை
முறைத்துப் பார்த்து
கண்டித்திருக்கிறாய்
கேட்காத போது
தண்டித்திருக்கிறாய்
என்
சின்ன பாதங்கள்
ஏறி ஆடியது
உன் முதுகில்
மட்டும் தான்
என்
பிஞ்சு கரங்கள்
இறுக பிடித்தது
உன் இடுப்பை
மட்டும் தான்
நீருக்குள் முழ்கி
தத்தளித்த என்னை
நீந்தி பிடித்து
கரை சேர்த்தது
நீ தான்
கவலைகள் உன்னை
அலைகழித்த போதும்
கவலைகள் இன்றி
என்னை வளர்த்தது
நீ தான்
சொந்தங்களை விட
சொத்துக்களை விட
என்னை தான்
எண்ணினாய்
மலை போல்
கடன்களை பெற்று
நிலங்களை விற்று
எனக்கு தான்
செய்தாய்
கடல் அளவு
உன்
தங்கங்களை
எனக்களித்து விட்டு
என்
எச்சிலை
உண்டவன் நீ
உன்
காலங்களை
எனக்கழித்து விட்டு
என்
கால்களை
அமுகியவன் நீ
ஒரு
இளைஞனாக
எழுந்து நின்றேன்
உன்னை
கிழவனாக
மாற்றி விட்டு
ஒரு
மனிதனாக
மாறி நிற்கிறேன்
உன்னை
மண்ணுக்குள்
அனுப்பி விட்டு !
Tags: father in my child,life with my father,tamil,kavi,kavithai,poem
anna really super lines na
ReplyDelete