Thursday, January 27, 2011

காவியத் தலைவி -1 ( விட்டு விடு )



என்
விழிகளில்
மோட்சம் என்றாய்

என்
வழிகளில்
தீட்சை என்றாய்

என் சிரிப்பை
சிதறும்
முத்து என்றாய்

என் முறைப்பை
முழு
சம்மதம் என்றாய்

நான்
பேச பேச
கேட்பேன் என்றாய்

நான்
கேட்க கேட்க
பேசுவேன் என்றாய்

எப்படி தெரிகிறேன்
நான் உனக்கு
அப்படியே தெரிவதில்லை
நான் எனக்கு

முக்காடில் மறைகிறேன்
தினமும் நான்
முழுவதுமாய் மறுக்கிறேன்
என்னை உனக்கு

என்ன சொல்ல
என் வாழ்க்கையே
ஒரு
சாபக் கேடாய் !

நானும் கூட
ஒரு
கானல் நிராய்
உனக்கு
மட்டும் அல்ல
எனக்கும் தான் !


Tags: lady lover,part one,leave me,tamil,kavi,kavithai,poem

No comments:

Post a Comment