Wednesday, January 26, 2011

குடியரசு



என்
பட்டினி சொந்தம்
பணத்துக்கு போடும்
ஓட்டுக்கு பெயர்
குடி உரிமை

அரசின்
ஓய்வு சட்டம்
அதிகாரம் செய்யாத
அரசியலுக்கு பெயர்
குடி ஆட்சி

படித்து விட்டு
வேலைக்கு
வெளிநாட்டின் சட்டத்தை
எதிர்நோக்கும்
இந்திய குடிமகன்

குடித்து விட்டு
அரக்கு
கூலி கொடுக்கும்
குடிகார
பொது மக்கள்

மன்னன்
ஆண்டது அரசாட்சி
மற்றவன்
ஆண்டது பரங்கியரட்சி

உற்றவன்
என்று சொல்லி
பணம்
உள்ளவன் எல்லாம்
ஆள்வது தான்
மக்கள் ஆட்சி

என்று தணியும்
எங்கள் 
ஏழையின் தாகம்
என்று மடியும்
எங்கள் 
இளைஞனின் மோகம் !


Tags: republic day,india,celebration,tamil,kavi,kavithai,poem

No comments:

Post a Comment