Sunday, January 30, 2011

துளிகள் - 3


நான் கழுதை
பொதி சுமக்கிறேன்
என் முதலாளிக்காக

அவன் மனிதன்
துணி வெளுக்கிறான்
பண முதலைகளுக்காக !


அனாதை
மட்டும் தான்
யாரையும்
அழ வைக்காமல்
சாகும்
வரம் பெற்றவன் !


நாட்கள் தான்
வயதின் கணக்கீடு
இல்லையேல்
மரணம் மட்டுமே
வாழ்க்கையின் குறுக்கீடு !


Tags: sweet drops,age,tamil,poem

No comments:

Post a Comment