Saturday, January 29, 2011

தீவிரவாதம்


கத்தியின் இரத்தத்தில்
சோகத்தின் வாடை
புத்தியின் ஓரத்தில்
பிடித்தது பீடை

கண்ணீர் துளிகளில்
காரிய சித்தி
கதறலின் நடுவில்
காரண புத்தி

பிறப்புக்கு  மட்டுமே
இறப்பு சொந்தம்
உடலுக்கு மட்டுமே
உயிர் உடைமை

மனமும் குணமும்
மனிதனின் பரிணாமம்
விருப்பும் வெறுப்பும்
வாழ்க்கையின் வெகுமானம் 

ஆசை
ஒரு ஆயுதகளம்
பேராசை
ஒரு போர்க்களம்

நப்பாசை
ஒரு நயவஞ்சகன்
நிராசை
ஒரு துர்போதனை

வார்த்தை எனும்
கூர்வாள்
வீசும் முன்
நிதானிக்க வேண்டும்

கோபம் எனும்
கொலைகாரன்
வருகைக்கு முன்
யோசிக்க வேண்டும்

ஒவ்வொரு
ஆரம்பத்திற்கும் - நீயே
முதல் காரணம்
ஒவ்வொரு
முடிவிற்கும் - நீ தான்
முழு காரணம்

கெட்ட வார்த்தை
முடியாதவனின் மூலதனம்
அடிதடி
முட்டாளின் கெட்டகுணம்

எந்த உடலும்
மண்ணுக்கு கூட
சமமானது அல்ல
எந்த உயிரும்
மழைக்கு கூட
நிகரானது அல்ல

பூக்களை கூட
பறிக்காதே
புத்தி இருந்தால்
போர்க்களம் பற்றி
நினைக்காதே
புரிந்து கொண்டால் !


Tags: terrorism, knife, tamil, poem, kavithai, tamil kavithai 

1 comment: