ஒரு
நிறைவான
அமைதி தேடி
அலையும் நாட்கள்
ஏறத்தாழ
என்
நாட்காட்டியின்
எல்லா தேதியிலும்
ஒரு
பெரிதான
நிம்மதி வேண்டி
நாடும் உறவுகள்
ஏறத்தாழ
என்
எதிரி வீட்டின்
இளைய உள்ளங்களிலும்
என்
பணிவுகள்
தலை குனிவாகவும்
என்
கனிவுகள்
நிலை குலைவாகவும்
மனித
மனங்களில்
மனப் பாடமாக
சமுதாய
சட்டங்களில்
திட்ட வட்டமாக
ஒட்டி ஒட்டி
தீட்டப்பட்ட
வட்டங்களுக்குள்
எட்டி பார்க்கும்
எண்ணற்ற தலைகள்
இருந்த இடத்தில்
இருந்து கொண்டே
எட்டி தாவி
நாடு பிடிக்கும்
நல்ல ஆட்டம்
அரசு உடைமையில்
மட்டுமே
அனைவரும் ஒன்றாக
பொறம்போக்கு
நிலம் கூட
பலரிடம் பட்டாவாக
நட்ட நடு
காட்டில் மட்டுமே
என்
நியாய தர்மங்கள்
சத்தம் போட்டு
சொல்லும் போது
இலைகளில்
சல சலக்கின்றன
பகுத்தறிவு
உலகத்தின்
பாகப் பிரிவினை
பணக்கார
பிள்ளைகளுக்கு
எஞ்சி இருப்பது
ஏழை குடிசைக்கான
கூவங்களின்
இருபக்க கரைகள்
மட்டுமே
இங்கே
விட்டு கொடுப்பது
முட்டாள் தனம்
வாரி வழங்குவது
ஊதாரி தனம்
இன்று
எந்த செல்வமும்
இயற்கையிடம் இல்லை
எல்லோருடையே
எண்ணமும்
இன்னொருவன் சொத்தில்
எங்கே
என் அமைதி
யாரிடம்
என் நிம்மதி
ஒவ்வொரு
விடியலிலும்
வேண்டிக் கொள்கிறேன்
ஒவ்வொருவர்
முகங்களிலும்
தேடிப் பார்க்கிறேன்
ஒரு நாளாவது
பிறரை
வருத்தப்படுத்தாமல்
என்னை
மகிழ்விப்பதற்கு !
நிறைவான
அமைதி தேடி
அலையும் நாட்கள்
ஏறத்தாழ
என்
நாட்காட்டியின்
எல்லா தேதியிலும்
ஒரு
பெரிதான
நிம்மதி வேண்டி
நாடும் உறவுகள்
ஏறத்தாழ
என்
எதிரி வீட்டின்
இளைய உள்ளங்களிலும்
என்
பணிவுகள்
தலை குனிவாகவும்
என்
கனிவுகள்
நிலை குலைவாகவும்
மனித
மனங்களில்
மனப் பாடமாக
சமுதாய
சட்டங்களில்
திட்ட வட்டமாக
ஒட்டி ஒட்டி
தீட்டப்பட்ட
வட்டங்களுக்குள்
எட்டி பார்க்கும்
எண்ணற்ற தலைகள்
இருந்த இடத்தில்
இருந்து கொண்டே
எட்டி தாவி
நாடு பிடிக்கும்
நல்ல ஆட்டம்
அரசு உடைமையில்
மட்டுமே
அனைவரும் ஒன்றாக
பொறம்போக்கு
நிலம் கூட
பலரிடம் பட்டாவாக
நட்ட நடு
காட்டில் மட்டுமே
என்
நியாய தர்மங்கள்
சத்தம் போட்டு
சொல்லும் போது
இலைகளில்
சல சலக்கின்றன
பகுத்தறிவு
உலகத்தின்
பாகப் பிரிவினை
பணக்கார
பிள்ளைகளுக்கு
எஞ்சி இருப்பது
ஏழை குடிசைக்கான
கூவங்களின்
இருபக்க கரைகள்
மட்டுமே
இங்கே
விட்டு கொடுப்பது
முட்டாள் தனம்
வாரி வழங்குவது
ஊதாரி தனம்
இன்று
எந்த செல்வமும்
இயற்கையிடம் இல்லை
எல்லோருடையே
எண்ணமும்
இன்னொருவன் சொத்தில்
எங்கே
என் அமைதி
யாரிடம்
என் நிம்மதி
ஒவ்வொரு
விடியலிலும்
வேண்டிக் கொள்கிறேன்
ஒவ்வொருவர்
முகங்களிலும்
தேடிப் பார்க்கிறேன்
ஒரு நாளாவது
பிறரை
வருத்தப்படுத்தாமல்
என்னை
மகிழ்விப்பதற்கு !