Monday, January 31, 2011

கா.தலைவன் - 3 ( நட்பு )


ஐந்து
வயது வரை
அன்னையின்
மடி சுகம்

பத்து
வயது வரை
தந்தையின்
தோள் சுகம்

பார்த்தது முதல்
இன்று வரை
நண்பனின்
அன்பு மட்டும்
என்றும் சுகம்

உன்னை
நான் காண
என்னோடு
ஊர் சுற்றியவன்
அவன் தான்

உன் விலாசம்
தேடுவதற்கு
எனக்கு
துணை நின்றவன்
அவன் தான்

எனக்காகவே
உன்னை தனது
தங்கையாக
உறவு கொண்டாடியவன்

உனக்காகவே
என்னை தனது
மச்சியாக
மாற்றிக் கொண்டவன்

ஒரு தட்டில்
இருவரும்
உண்ட நாட்கள்
இன்றும் உள்ளன

ஒருவர் தோளில்
ஒருவர் கைப்போட்டு
சென்ற தூரங்கள்
என்றும் நினைவில்

பணம் பணம்
என்று கேட்கும்
உலகில் - அவன்
ஒருவன் மட்டும்
விதி விலக்கு

தினம் தினம்
நான் கேட்காமலே
தருவதில் - அவன்
இருவேறு எண்ணம்
இல்லாது போனவன்

என்
தலை முறையின்
முதல் உறவினன்
அவன்

என்றும்
விலகி செல்லாமல்
வெளியிலிருந்து ஆதரவு
தருபவன்

என்
இதயத் தடாகத்தில்
பூத்த
செந்தாமரை நீ

அவன்
இலைகளை எதிர்பார்க்காமல்
வேர்களுக்கு வலுவேற்றும்
வற்றாத நீர்

நல்ல 
நட்பின் ஓடத்தில்
நம்பி ஏறியவன்
வாழ்க்கை
என்றும்
வெற்றி தான் !


Tags: friendship, friends, good friend

1 comment:

  1. என்
    தலை முறையின்
    முதல் உறவினன்
    அவன்

    super lines :)

    ReplyDelete