Friday, January 21, 2011

மனப் போராட்டம்

திசைக்கு நூறு
தலைகள்
விழுந்து கிடந்தன !

தலைக்கு நூறு
பருந்துகள்
உண்டு மகிழ்ந்தன !

உடல் கூருகள்
உடல்கள்
உருத் தெரியாமல்
சிதறி கிடந்தன !

கை வேறாய்
கால் வேறாய்
கணக்கின்றி
கலந்து கிடந்தன !

என்
மனதில் தான்
நடந்து கொண்டிருந்தது
இத்தனை
மூர்க்கமான போர் !

எனக்குள்
நானே
துண்டாடப்பட்டிருந்தேன்
அத்தனை
பாவப்பட்ட உயிர்களாய் !

Tags: mind,tamil,kavi,kavithai,poem

1 comment: