Monday, May 7, 2012

உனக்கான நான்

உனக்கான 
என் பிறப்பு 
எனக்கான 
என்  வாழ்க்கை !

உனக்கான 
என் அறிவு 
எனக்கான 
என் ஆற்றல் !

உனக்கான 
என் தவிப்பு 
எனக்கான 
என் அக்கறை !

உனக்கான 
என் காதல் 
எனக்கான 
என் தேடல் !

உனக்கான 
என் தாலி 
எனக்கான 
என் வேலி !

உனக்கான 
என் பிள்ளை 
எனக்கான 
என் வாரிசு !

உனக்கான 
என் உழைப்பு 
எனக்கான 
என் பிழைப்பு !

உனக்கான 
என் ஊதியம்
எனக்கான 
என் வருமானம் !

உனக்கான 
என் சொத்து 
எனக்கான 
என் சொந்தம் !

உனக்கான 
என் சிரிப்பு 
எனக்கான 
என் மகிழ்ச்சி !

உனக்கான 
என் அழுகை 
எனக்கான 
என் ஆறுதல் !

உனக்கான 
உன் தனிமை 
எனக்கான 
என் ஓய்வு !

உனக்கான 
என் மருத்துவம்
எனக்கான 
என் விருப்பம் !

உனக்கான 
என் புலம்பல் 
எனக்கான 
என் கவலை !

உனக்கான 
என் கவலை 
எனக்கான 
என் கண்ணீர் !

உனக்கான 
என் கண்ணீர் 
எனக்கான 
என் துக்கம் !

உனக்கான 
என் துக்கம் 
எனக்கான 
என் மரணம் !

உனக்கான 
என் மரணம் 
எனக்கான 
என் முடிவு !

Saturday, April 21, 2012

எங்கே போகிறோம் ?

முன்னோர்களை விட
முன்னேற துடிக்கும்
நம்
முற்போக்கு சிந்தனை !

எண்ணங்களை எல்லாம்
இயந்திர மயமாக்கும்
நம்
எதிர்கால இலட்சியம் !

உடலில் கூட
உலோகங்கள் குடியேறி 
உயிர்  காக்கும்
அவசியம் !

மனதை கூட
இரும்பாக்கி கொண்டு
வாழ வேண்டிய
கட்டாயம் !

இருந்த இடத்தில்
இருந்து கொண்டே
இலட்சங்கள் சம்பத்திக்கும்
கணிணி அறிவு !

நினைத்த நேரத்தில்
நினைத்த செயல்களை
செய்து முடிக்கும்
அறிவியல்  வளர்ச்சி !

இயற்கையை கூட
செயற்கையாய் செய்து
கட்டணம் வசூலித்து
காட்சிக்கு வைக்கிறோம் !

இன்பங்களை கூட
தவணை முறையில்
தருவித்து கொண்டு
திருப்தி அடைகிறோம் !

கிராமத்தில்  வளர்த்து
பிள்ளைகளை
நகரத்திற்கு அனுப்பி
படிக்க வைக்கிறோம் !

நகரத்தில் வாழும்
தந்தை
மகனை வளர்த்து
நாடு கடத்துகிறார் !

பிள்ளைகளை பார்க்க
வெளிநாடு சென்று
அங்கேயே
தங்கி விடுகிறோம் !

அலுவல் நிமித்தம்
என்ற  பெயரில்
அகதியாக
மாறி  விடுகிறோம் !

சொத்தை
விட்டு பிரிந்தோம்
சொந்தங்களை
விட்டு பிரிந்தோம்

அடுக்கு மாடியில்
குடியிருந்து கொண்டு
வெட்டவெளியை
தேடி  ஓடுகிறோம் !

தலைவலி 
வந்தால் கூட
விலை கொண்ட
வைத்தியம் செய்கிறோம் !

வெளிநாட்டில் இருந்து
மருந்து மாத்திரைகளை
அரசாங்கமே
இறக்குமதி செய்கிறது !

மனிதனின் ஆயுட்காலம்
தலைமுறை முடிவில்
ஓரைந்து
குறைகிறது விடுகிறது !

விளை நிலங்கள்
தரிசாகி விட்டன
தாவரங்கள்
அரிதாகி விட்டன !

முப்போகம் இருபோகமாகி
இருபோகம் ஒருபோகமாகி
ஒருபோகமும்
குறைவாகி போனது !

அறிவாளிகள் இன்றி
முறையாக செய்யப்படாத 
விவசாயம்
விலையேறி போனது !

பொருளாதார வளர்ச்சியில்
காலணா அரையணா
முற்றிலும்
மறைந்து விட்டது !

ஐந்து ரூபாய்
பத்து ரூபாய்
அரையணா ஓரணா
ஆகி விட்டது !

ஏழையின் விகிதமும்
பணக்காரனின் விகிதமும்
எந்த மாற்றமும்
காண வில்லை !

நடுத்தர வர்க்கங்களின்
நாய் பிழைப்பு
இந்த காலத்திலும்
மாற வில்லை !

அறுபதில்
தந்தையை இழந்து
மகன்
அனாதையாக வாழ்கிறான் !

இருபதில்
பாரங்கள் சுமக்கும்
மகனை  கண்டு
தந்தை
வருத்தத்துடன் சாகிறார் !