Thursday, January 27, 2011

காவியத் தலைவி - 2 ( ரகசியம் )

 
என்
தோட்டத்து முல்லை
தொட்டால் சிணுங்குகிறது
என்னை போல

என்
வாட்டதைக்  கண்டு
வண்டுகள் தவிக்கின்றன
பூவாய் எண்ணி

ஈரமான
கூந்தலில் சிதறும்
ஈரம் கேட்கிறது
சிரிக்கச் சொல்லி

நீளமான
விரல்கள் தீட்டும்
கோலம் சிரிக்கிறது 
பேசு என்று

காரமான
மனசு எண்ணும்
கானம் பாட
குயில்கள் எழுந்தன

பாரமான
இதயம் சொல்லும்
பல்லவி கேட்க
பகலவன் வந்தான் 

குதித்து குதித்து
குழம்பு கூட
கொதிக்கிறது
உண்மை அறிய

பசித்து பசித்து
வயிறு கூட
எரிகிறது
உள்ளம் உணர

கடிகார
முற்கள் மட்டும்
கம்பிரமாய் அதட்டியது
நேரம் ஆகிடுச்சு

காலில்
மாட்டும் போது
ரகசியம் கேட்க
அவசரமாய் கடித்த
செருப்பை
மிதித்து விட்டு
புறப்பட்டேன்

வேலைக்கு போக
சரியான
வேளைக்கு போக !


Tags: secreat,love,morning,tamil,kavi,kavithai,poem

No comments:

Post a Comment