உறக்கத்தில்
ஒரு நினைவு
உறக்கம்
கலைந்தது போல்
ஒரு கனவு
பார்த்த முகம்
பார்க்காத முகம்
தினமும்
பார்க்கும் முகம்
நடந்த செயல்
நடக்காத செயல்
அன்றாடம்
நடக்கும் செயல்
ஒவ் ஒன்றாக
ஒன்றன் பின்
ஒன்றாக
ஒன்றுடன் ஒன்று
கலந்து
ஒரே சீரான
ஒன்றுக்கு ஒன்று
முரண்பாடான
ஒன்றுமே
புரியாமல்
சிந்தனை எழுதும்
சீர்திருத்த கணிதம்
சிந்திப்பவன் மனதை
சமப்படுத்தும் முயற்சி
உடல் ஒரு
சக்தி எந்திரம்
உணர்வுகள் தரும்
முக்தி மந்திரம்
மண்ணுக்கும்
மனிதனுக்கும் உறவுண்டு
மண்ணோடு
மண்ணாகும் உரிமையுண்டு
ஒவ் ஒரு
செயலுக்கும்
உபச் செயல் உண்டு
ஒவ் ஒரு
நினைவுக்கும்
உறவுகள் உண்டு
அறிவின் தெரிவில்
அறிவது பாதி
அறியாமல் இருப்பது
அனுபவ நியதி
ஒவ் ஒரு
புள்ளிக்கும்
ஊசலாட்டம் உண்டு
உன்னிப்பாய்
பார்த்தாலும்
உணரமுடிவதில்லை
கண்கள் அறியா
ஊசலின் ஆட்டம்
கனவில் தெரிவதே
பலிக்கும் உண்மை
உன்னை அறியா
உன்னை
உலகம் பார்க்கிறது
உன்னை அறியும்
உன்னை - உன்
உள்ளம் பார்க்கிறது
உள்ளம் பேசும்
கனவு
உள்ளதை சொல்லும்
உரக்க கேட்கும்
நினைவு
உறக்கத்தில் நடக்கும்
Tags: dreams,dreams walk,tamil,kavi,kavithai,poem
ஒரு நினைவு
உறக்கம்
கலைந்தது போல்
ஒரு கனவு
பார்த்த முகம்
பார்க்காத முகம்
தினமும்
பார்க்கும் முகம்
நடந்த செயல்
நடக்காத செயல்
அன்றாடம்
நடக்கும் செயல்
ஒவ் ஒன்றாக
ஒன்றன் பின்
ஒன்றாக
ஒன்றுடன் ஒன்று
கலந்து
ஒரே சீரான
ஒன்றுக்கு ஒன்று
முரண்பாடான
ஒன்றுமே
புரியாமல்
சிந்தனை எழுதும்
சீர்திருத்த கணிதம்
சிந்திப்பவன் மனதை
சமப்படுத்தும் முயற்சி
உடல் ஒரு
சக்தி எந்திரம்
உணர்வுகள் தரும்
முக்தி மந்திரம்
மண்ணுக்கும்
மனிதனுக்கும் உறவுண்டு
மண்ணோடு
மண்ணாகும் உரிமையுண்டு
ஒவ் ஒரு
செயலுக்கும்
உபச் செயல் உண்டு
ஒவ் ஒரு
நினைவுக்கும்
உறவுகள் உண்டு
அறிவின் தெரிவில்
அறிவது பாதி
அறியாமல் இருப்பது
அனுபவ நியதி
ஒவ் ஒரு
புள்ளிக்கும்
ஊசலாட்டம் உண்டு
உன்னிப்பாய்
பார்த்தாலும்
உணரமுடிவதில்லை
கண்கள் அறியா
ஊசலின் ஆட்டம்
கனவில் தெரிவதே
பலிக்கும் உண்மை
உன்னை அறியா
உன்னை
உலகம் பார்க்கிறது
உன்னை அறியும்
உன்னை - உன்
உள்ளம் பார்க்கிறது
உள்ளம் பேசும்
கனவு
உள்ளதை சொல்லும்
உரக்க கேட்கும்
நினைவு
உறக்கத்தில் நடக்கும்
Tags: dreams,dreams walk,tamil,kavi,kavithai,poem
No comments:
Post a Comment