Monday, January 24, 2011

இளமையில் வறுமை


வறுமைக்கு பிறந்தவன்
வாழத் துடிக்கிறான்
வாடியப் பின்னும்
ஓடி வருகிறான்

ஒரு வேளை
உணவு தான்
அவனது நோக்கம்
ஒரு நாளைய
உயிர் தான்
அவனது ஏக்கம்

தினம் தினம்
செத்து பிழைக்கிறான்
தெரிந்திருந்தும்
சாக மறுக்கிறான்

என்றாவது ஒருநாள்
வாழ்வோம் என்றல்ல
எப்படி சாவது
என்ற கவலையில்

எலும்புகள் சொல்லும்
ஏழ்மையின் கொடுமை
யாருக்கு தெரியும்
ஏழையின் நிலைமை

இந்த சுவர்கள்
செப்பனிடப்பட வேண்டும்
ஒரு நல்ல
சித்திரம் எழுத

இந்த கரங்கள்
ஏற்கப்பட வேண்டும்
ஒரு வலிமையான
உறவுகள் அமைய !


Tags: poor,poor peoples,at war,tamil,kavi,kavithai,poem

No comments:

Post a Comment