காரணமில்லாத
கண்ணீர் படுக்கை
பல
காரியம் செய்த
காரணப் படுக்கை
உண்மைகள்
கோடி
உவமைகள் சொல்லும்
உள்ளத்தில்
ஆயிரம்
உருவகம் எழுதும்
பொய் முகம்
கழுவும்
மெய்யான வருத்தம்
பூமியை
தழுவும்
பூவுடல் மோட்சம்
காலடி
தடத்தின்
ஏளனப் பார்வை
கைத் தொடும்
தூரத்தின்
கரவொலி சிரிப்பு
விழி கூட
துரோகம் செய்தது
மொழி கூட
மவுனம் சாதித்தது
செவிகள்
செவிடாகி போனது
சிந்தனை
செயலிழந்து போனது
வெறும்
சதை பிண்டமாய்
ஒரு
வாழ்க்கை
பெரும்
சாப கேடாய்
ஒரு
வாழ் நாள்
மவுனம்
அதிகமாக பேசுகிறது
மனம்
அமைதியின்றி தவிக்கிறது
சாதனைகள்
கை கட்டி
நிற்கின்றன
சோதனைகள்
வாய் பொத்தி
செல்கின்றன
காலம்
பார்த்து பார்த்து
நகர்கின்றது
காலன்
நகர்ந்து நகர்ந்து
வருகின்றான்
பாவங்கள்
சேர்ந்து கொண்டன
பாவமாய்
கடமை நின்றது
உரிமையாய்
மரணம் வந்தது
உறவிழந்து - ஒரு
உலகம் நின்றது
இது
அழியும் உடலின்
ஆயுள் படுக்கை
அழியா உயிரின்
மரணப் படுக்கை !
Tags: death,bed,kavi,kavithai,poem,tamil
கண்ணீர் படுக்கை
பல
காரியம் செய்த
காரணப் படுக்கை
உண்மைகள்
கோடி
உவமைகள் சொல்லும்
உள்ளத்தில்
ஆயிரம்
உருவகம் எழுதும்
பொய் முகம்
கழுவும்
மெய்யான வருத்தம்
பூமியை
தழுவும்
பூவுடல் மோட்சம்
காலடி
தடத்தின்
ஏளனப் பார்வை
கைத் தொடும்
தூரத்தின்
கரவொலி சிரிப்பு
விழி கூட
துரோகம் செய்தது
மொழி கூட
மவுனம் சாதித்தது
செவிகள்
செவிடாகி போனது
சிந்தனை
செயலிழந்து போனது
வெறும்
சதை பிண்டமாய்
ஒரு
வாழ்க்கை
பெரும்
சாப கேடாய்
ஒரு
வாழ் நாள்
மவுனம்
அதிகமாக பேசுகிறது
மனம்
அமைதியின்றி தவிக்கிறது
சாதனைகள்
கை கட்டி
நிற்கின்றன
சோதனைகள்
வாய் பொத்தி
செல்கின்றன
காலம்
பார்த்து பார்த்து
நகர்கின்றது
காலன்
நகர்ந்து நகர்ந்து
வருகின்றான்
பாவங்கள்
சேர்ந்து கொண்டன
பாவமாய்
கடமை நின்றது
உரிமையாய்
மரணம் வந்தது
உறவிழந்து - ஒரு
உலகம் நின்றது
இது
அழியும் உடலின்
ஆயுள் படுக்கை
அழியா உயிரின்
மரணப் படுக்கை !
Tags: death,bed,kavi,kavithai,poem,tamil
No comments:
Post a Comment