மனம்
ஒரு குரங்கு
நேரத்திற்கு நேரம்
வேறுபட்ட சிந்தனைகளுக்கு
தாவிச் செல்லும்
வயது
இரண்டும் கெட்டான்
உடலின் இச்சைக்கும்
மனதின் ஆசைக்கும்
அறிவை ஆட்டுவிக்கும்
உன்னோடு
நான் பேசினால்
என்னோடு
நீ பேசினால்
ஊர் தவறாக
நினைப்பது இருக்கட்டும்
நீயும் நானும்
நம்
எண்ணங்களுக்கு
கடிவாளம் இடும்
சக்தி பெற்றவர்களா
பழக்கத்தில்
ஒருவரை ஒருவர்
புரிந்து கொண்டாலும்
பருவத்தில்
உருவத்தை பார்க்காத
உள்ளம் உண்டா
நம்
பார்வையில் தவறில்லை
நம்
பேச்சில் தவறில்லை
நம்
செயலில் தவறில்லை
நம்
இருவருக்கும் இடையில்
நம்
எண்ணங்களில் இச்சையுண்டு
நம்
வார்த்தைகளில் இளமையுண்டு
நம்
பகிர்தலில் எல்லாமுண்டு
நம்
இருவரைப் பற்றியும்
ருசிகண்ட
சிங்கத்திருக்கு
முதலாளியின் இரத்தம்
வேறல்ல - அது
அதனுடைய தவறும்
அல்ல
நாம் மிருகம்
அல்ல
மனிதர்கள் தான்
பகுத்தறிவுடைய நாம்
மாக்கள் அல்ல
மக்கள் தான்
உடல் தான்
உயிரின் ஆதாரம்
பருவம் தான்
உடலின் சேதாரம்
இளமை தான்
இனத்தின் விருத்தி
வாலிபம் தான்
வலிமையின் மூர்த்தி
இத்தனையும் உணர்ந்து
ஒரு
உத்தமமான நட்பு
கொண்டோம்
எந்த ஒரு
தவறும் இல்லாமல்
இனிமையான சிநேகம்
கொண்டோம்
என்
பிரியமான தோழியே
உயிர் கொடுத்த
தாய் தந்தைக்கே
தாலி கட்டியப்பின்
உன் மீது
உரிமை குறைவென்றால்
நானெல்லாம்
உள்ளத்தை கூட
சிநேகமாகத் தானே
தந்தேன்
உன் மீதான
உரிமை என்னடி
எனக்கு
என்
உள்ளத்தையே
நண்பனாக தந்தேன்
உனக்கு
நட்பை
பிரியும் வேளை
நரகம் அன்றோ
எனக்கு !
Tags: Girl Friend, impossible relation ship, true and false






















