Sunday, January 30, 2011

பிச்சைக்காரன்

முதல் முறை
கையேந்தினேன்
பிச்சை கேட்டு
இறுதி முறை
எச்சரித்த
தன்மானம் விட்டு

முறைப்பவன் பற்றி
கவலை இல்லை
என்
இரைப்பை பசி
தீர வேண்டும்

வெறுப்பவன் கண்டு
வெட்கம் இல்லை
என்
இன்றைய நாள்
ஓட வேண்டும்

தற்கொலை
செய்து கொள்ள
சட்டம் இல்லை
கொலை செய்வதற்கு
அனுமதி இல்லை

தொழில் செய்வதற்கு
ஏதும் இல்லை
சும்மா இருந்தால்
தொல்லை இல்லை

பிச்சை
எனக்கு என்னை
எதிரியாக்கும்
பணம்
இந்த ஊருக்கு
என்னை விரோதியாக்கும்

எப்போதும்
காய்ந்த தட்டும்
துவைக்காத
கந்தல் துணியும்
இப்போது
என் சொத்து

இதை
பார்ப்பவனும் இல்லை
பறிப்பவனும் இல்லை

உற்று நோக்க
யாரும் இல்லாத
உயிருள்ள குப்பை
நான்

உரக்க பேச
ஏதும் இல்லாத
உணர்வற்ற உயிர்
நான்

பிறக்கும் போது
நான்
பிச்சைக்காரன் இல்லை
இப்போது
நான்
பணக்காரன் இல்லை

இடைப்பட்ட வாழ்க்கையில்
நிம்மதி இல்லை
நிம்மதி இல்லமால்
வாழ்வதற்கும்
தகுதி இல்லை

அடிமட்ட
ஏழையும் போராடுகிறான்
நடுத்தர
வர்கத்திலும் போராடுகிறான்

மேல்மட்ட
பணக்காரனும் போராடுகிறான்
மிதிபட்டு
நானும் போராடுகிறேன்

அவர்கள்
ஒருவரை ஒருவர்
அழித்துக் கொள்ள
போராடுகிறார்கள்

நான்
அவர்களில் ஒருவனாக
அழிக்கப்பட்டு போராடுகிறேன்

இன்னும் எனக்கு
வென்று விடுவேன்
என்ற
எண்ணம்  இருக்கிறது
என் மண்ணில்
எல்லோரும்
எரிக்கப்பட்டால் !


Tags: Beggar, poor life, tamil, poem, kavithai

1 comment: