உயிர்
கொடுத்தாய்
உடல்
கொடுத்தாய் !
உலகம் என்னும்
பூமிப் பந்தில்
என்னை
உலவ விட்டாய் !
உணவு
கொடுத்தாய்
உடை
கொடுத்தாய் !
உடைமை என்னும்
உன் சொத்தில்
எனக்கு
உரிமை தந்தாய் !
சொந்தம் தந்தாய்
பந்தம் தந்தாய் !
சுற்றும் உலகில்
எனக்கொரு
சுற்றம் தந்தாய் !
துன்ப பட்டாய்
துயரப் பட்டாய் !
உன் இன்பத்தையே
எனக்காக
இழந்து விட்டாய் !
மூப்பு கண்டாய்
பிணி கண்டாய் !
உன் முடிவிலும்
எனக்காக
கண்ணீர் விட்டாய் !
அனாதை என்ற
வார்த்தை
அக்கினியாய் சுடுகிறது !
இப்போது தான்
அதன்
அர்த்தம் புரிந்ததால் !
Tags: dad,son,social,tamil,kavi,kavithai,poem
Tags: dad,son,social,tamil,kavi,kavithai,poem
nice na
ReplyDelete