மவுனமாய் வெடிக்கிறேன்
மனதுக்குள் துடிக்கிறேன்
என்னை நானே
எழுதிப்பார்க்கிறேன்
எனக்குள் நானே
அழித்துப்பார்கிறேன்
புன்னகை மருந்தை
பூசிப் பார்க்கிறேன்
பொய்யாய் ஒருமுறை
சிரித்துப் பார்கிறேன்
என்ன என்ன
என்று
கேட்டுப் பார்கிறேன்
எதுவும் இல்லை
என்று
சொல்லிப் பார்கிறேன்
இதயம் வலிப்பதாய்
எண்ணுகிறேன்
இரத்தம் கசிவதாய்
உணருகிறேன்
நான் அறியாமல்
நடந்து செல்கிறேன்
நாள் அறியாமல்
கடந்து செல்கிறேன்
விழியில் கசியும்
கண்ணீரை - என்
விரல்கள் இன்றி
துடைக்கிறேன்
வெயிலில் தெரியும்
தண்ணிரில் - என்
தாகம் தீர்க்க
நினைக்கிறேன்
இன்னமும் மாறாத
மனப் போராட்டம்
என்னையே
மாற்றிப்போடும்
தினப் போராட்டம் !
Tags: daily,war,tamil,kavi,kavithai,poem
மனதுக்குள் துடிக்கிறேன்
என்னை நானே
எழுதிப்பார்க்கிறேன்
எனக்குள் நானே
அழித்துப்பார்கிறேன்
புன்னகை மருந்தை
பூசிப் பார்க்கிறேன்
பொய்யாய் ஒருமுறை
சிரித்துப் பார்கிறேன்
என்ன என்ன
என்று
கேட்டுப் பார்கிறேன்
எதுவும் இல்லை
என்று
சொல்லிப் பார்கிறேன்
இதயம் வலிப்பதாய்
எண்ணுகிறேன்
இரத்தம் கசிவதாய்
உணருகிறேன்
நான் அறியாமல்
நடந்து செல்கிறேன்
நாள் அறியாமல்
கடந்து செல்கிறேன்
விழியில் கசியும்
கண்ணீரை - என்
விரல்கள் இன்றி
துடைக்கிறேன்
வெயிலில் தெரியும்
தண்ணிரில் - என்
தாகம் தீர்க்க
நினைக்கிறேன்
இன்னமும் மாறாத
மனப் போராட்டம்
என்னையே
மாற்றிப்போடும்
தினப் போராட்டம் !
Tags: daily,war,tamil,kavi,kavithai,poem
No comments:
Post a Comment