Saturday, January 29, 2011

மனித நேயம்


கண்ணீர் துளிகள்
விழும் முன்பே
கலக்கத்தை
துடைத்து விடு

கலக்கம் வந்து
சேரும் முன்பே
கலவரத்தை
நிறுத்தி விடு

உன் சுதந்திரம்
உறவினர்களின்
புன்னகைக்கு தான்

இந்த உலகமே
உனக்கு
உறவினர்கள் தான்

உன்னால்
முடியும் என்றால்
வயோதிகரின் கைத்தடிக்கு
ஒரு நாள்
விடுமுறை கொடுத்துப்பார்

உனக்கு
மீதம் உள்ளதென்றால்
ஊனமுற்றவனின் வலிக்கு
ஒருமுறை
உதவி செய்துப்பார்

குழந்தைகளுக்கு
முகவரி தேடாதே
முடியும் என்றால்
உன் வீட்டின்
விலாசத்தை கொடு

ஏழைகளுக்கு
இலவசம் கொடுக்காதே
இயலும் என்றால்
உன் வேலையில்
ஒன்றை பகிர்ந்துகொடு

பிறப்பும் இறப்பும்
பெற்றவளுக்கும்
பிள்ளைக்கும்
பொதுவானது தான்

பிணியும் மூப்பும்
மாட்டிற்கும்
மனிதனுக்கும்
சமமானது தான்

சுயநலம் மட்டுமே
உன்னுடையது
தன்னலம் கொண்ட
நீ கூட
மண்ணுக்கே சொந்தம் !


Tags: Human being, life with others, tamil, kavithai, kavi, poem

1 comment: