Wednesday, January 26, 2011

எந்தையே


எந்தையே
எந்தன் தந்தையே ! – என்
சிந்தை எல்லாம்
வாழும்
தெய்வமே !

உன் பெயர்
சொல்ல சொல்ல
தெய்வ
திரு மந்திரம்
ஆகும் !

உன் குரல்
மெல்ல மெல்ல
நான்
போற்றுகின்ற வேதம்
சொல்லும் !

உன் உருவம்
தந்தை என்றால்
உன் அருவம்
தெய்வம் அன்றோ !

உன் கனவு
இலட்சியம் என்றால்
உன் நினைவு
நிச்சயம் அன்றோ !

தந்தைக்கு
மரணமில்லை
தமையன்
இருக்கும் வரை !

உனக்கு
மறைவு இல்லை
நான்
உள்ள வரை !

நீ கடவுள்
நீயே கடவுள்
நீ தான் கடவுள்
எனக்கு !

Tags: father,god,death,tamil,kavi,kavithai,poem

2 comments: