அகல் விளக்கின்
திரி -
இருந்தால்
எண்ணையை எரிக்கும்
இல்லையேல்
தன்னை தானே
எரித்துக் கொள்ளும்
அருகில்
இருப்பவர்கள் மேல்
ஆதங்கப்பட்டேன்
அவர்கள்
இல்லாத போது
வேதனைப்பட்டேன்
மின்னி மறைந்தது
அவன் முகம்
மீளாத் துயரத்தில்
என் மனம்
அனிச்சையாய் ஒதுக்கினேன்
என் கூந்தலை
அவன் பார்ப்பதாய்
ஒரு ஞாபகம்
அதிசயமாய் இன்று
அலுவல்கள்
சுமையாய் தெரிகிறது
ஆச்சர்யமாய் எனக்கு
அலுவலகமே
ஆனந்தமாக தெரிகிறது
வேலையில்
இருந்து கொண்டு
அவன்
விழிகளைப் பற்றி
யோசித்தேன்
மூலையில்
நின்று கொண்டு
அவன்
முக மாற்றத்தை
சிந்தித்தேன்
முதல் முறையாக
தற்காலிக மறதி
தொற்றிக் கொண்டது
விதி விலக்காக
பார்பவரைக் கண்டு
சிரிக்கத் தோன்றியது
அடிக்கடி
நான் கைப்பையை
திறந்து மூடினேன்
அடிக்காத
சுவர் கடிகாரத்தை
வேடிக்கை பார்த்தேன்
வலிகள்
வரத்தான் செய்கிறது
வயது தான்
உணர மறுக்கிறது
கோபம்
கொள்ளத்தான் செய்கிறேன்
குழப்பம் அதை
கொன்று செல்கிறது
ஏன்
என்னை பார்கிறான்
என்று வருந்துகிறேன்
நாளையும்
அவன் பார்த்திட
நான் விரும்புகிறேன்
நான்
ரசிக்கப் படுகிறேன்
என்ற ஆனந்தம்
என்னை
ஒருவன் ரசிக்கிறான்
என்ற ஆதங்கம்
என்னை நானே
இரு கூறாக்கினேன்
தந்தையின்
தன்மானத்திற்கும்
அவனின்
சன்மானத்திற்கும் !
Tags : lady affection, official love, tamil, kavi, poem

good
ReplyDelete