நீ
காட்டியது தான்
என்
கடவுள் !
நீ
ஏற்றியது தான்
அதன்
தீபம் !
நீ
சார்ந்தது தான்
என்
சமயம் !
நீ
செய்தது தான்
அதன்
சடங்கு !
நீ
சூட்டியது தான்
என்
சாதி !
நீ
சொன்னது தான்
அதன்
நீதி !
நீ
வாழ்ந்தது தான்
என்
சமூகம் !
நீ
வளர்த்தது தான்
அதன்
சட்டம் !
உன்
மகன் தான்
நான் !
உன்
முகம் தான்
எனக்கு !
இருந்தும்
யாருமே இல்லையே
உன்
இறுதி நாட்களில்
நான் கூட
இறங்க வில்லையே
உன்
தோளின் மீதிருந்து... !
Tags: father teach,son feel,tamil,kavi,kavithai,poem
Tags: father teach,son feel,tamil,kavi,kavithai,poem
good
ReplyDelete