Friday, January 28, 2011

காவியத் தலைவன் - 2 ( பணம் )


பணம்
காதலை கூட
விலை பேசுவது
அதன் குணம்

கரன்சி
காகிதம் கூட
கடவுள் ஆவது
அதன் வரம்

அவளை விட
என்னை
அதிகமாக இம்சிக்கும்
காந்தி தாத்தா

அவள்
நினைவுகளை விட
என்னை
மோசமாக தாக்கும்
நோட்டின் இலக்கங்கள்

ஒற்றை
மனிதன் ஊதியத்தை
வெற்றுக் காகிதம்
தருகிறது வட்டியாய்

பெற்ற
தாயின் பாசத்தை
கத்தை நோட்டு
பகிர்கிறது ஊதியமாய்

அவள்
கனவின் வாசலுக்குள்
அத்து மீறி
நுழைகிறது
தந்தையின் அதட்டலாய்

என்
இதய கூட்டுக்குள்
அவள் எதிரே
அமர்கிறது
தேடுகின்ற வேலையாய்

வலிகள்
பரிமாறப் படுவதில்லை
வாழ்க்கை
இளைப்பாற விடுவதில்லை

அவள்
வரவிற்காக காத்திருந்தேன்
என்
வேலைக்கான விண்ணப்பத்துடன் !


Tags: leader in love,money,tamil,kavi,kavithai,poem

1 comment: