Thursday, January 27, 2011

காவியத் தலைவன் - 1 ( சொல்லி விடு )



உன்
பாதைகள் தோறும்
வலை விரித்து
நிற்கவில்லை
சிலையாகத் தான் 
நின்றேன்

உன்
ஒரு நொடிப் பார்வை
என்னை 
உயிர் பெறச்
செய்யாதா என்று

என்
கைகளில்
பொன்னை தாங்கி
நிற்கவில்லை
பூவை ஏந்தி
நின்றேன்

என்
மனதை நீ
புரிந்து கொள்ள
மாட்டாயா என்று

எல்லா இரவுகளும்
பெளவுர்ணமியை பார்ப்பதில்லை
பிறை நிலவிலும்
அவை
பிரகாசம் அடைகின்றன

வெறும்
வார்த்தைகள் அல்ல
உன் பேச்சு
என்
வாழ்விற்கு அது
உயிர் முச்சு

யார் சொல்லியும்
கேட்காத
நான் மட்டும் அல்ல
நான் சொல்லியும்
கேட்காத
நானும் உண்டு

நீ மட்டும் 
எதுவும் சொல்ல
விரும்பவில்லை
இருந்தும் நான்
சுற்றி வருகிறேன்
ஒரு
வார்த்தையாவது
சொல் என்று

சொல்லி விடு
உன் சோகங்களை
சுமக்கிறேன்
என் சுமைகளுடன்
சேர்த்து

சொல்லி விடு
என் சுகங்களை
பகிர்கிறேன்
உன் சொந்தங்களுடன்
சேர்ந்து


Tags: lover,tell me,boy,tamil,kavi,kavithai,poem

1 comment: