கண்ணீர் கடலில்
ஒரு தேசம்
கடல் நீரில்
கண்ணீரின் வாசம்
பொங்கி எழுந்தது
பூமி
புதைந்து போனது
ஆ சாமி
பால் தெளித்து
பாடையில்
ஏற்றிக் கொண்ட
பெருமை
கரையேறி வந்து
கையேந்தி
பெற்றுக் கொண்ட
கொடுமை
அறிவற்ற மண்
அறிவற்ற கடல்
அறிவுள்ள மனிதன்
அறிவுள்ள அறிவியல்
இயற்கை நியதி
யார்
இங்கே நிரந்தர
அதிகாரி
பெற்ற தாய்
பிள்ளைக்கு முன்பே
இறப்பது
உயிர்களின் விதி
உயிர்களின் தாய்
உலகை அழித்து
உயிர் வாழ
நினைப்பது
தாய்மையின் சதி
இறைவனாக
முறையிட்ட போதும்
இறங்கி வராத
இயற்கை
எமனாக
குறைபட்ட போதும்
மனம் மாறாத
இயந்திரம்
பரம்பரை சொத்து
ஒரு முறையில்
முடிந்தது - ஒரே
ஒருமுறை சேர்த்தது
மறுமுறையில் கரைந்தது
நாட்டின் செல்வம்
நடு வீதியில்
நாடே இன்று
நடு வீதி தான்
கட்டிடம்
தேவையில்லை என்றால்
கேட்பவர்
யார் இங்கே
குரங்கு
மனிதர் நம்மில்
மரத்தில்
குடியிருப்பவர் யார்
நாம்
செயற்கையாக சேர்க்கும்
அனைத்தும்
இயற்கைக்கு எதிரானது
இருந்தும்
நாம்
இயற்கையோடு இணைந்து
வாழும்
திறமையற்றவர்கள்
காட்டில் வாழும்
தகுதி இன்றி
நாம் நாட்டுக்கு
ஓடி வந்த
நரி
நம்
அரச வேடம்
கலைகிறது
அதிகார சாயம்
வெளுக்கிறது
அவ்வபோது
அரங்கேறும்
இயற்கையின்
கோரத் தாண்டவத்தில் !
நம்
ReplyDeleteஅரச வேடம்
கலைகிறது
அதிகார சாயம்
வெளுக்கிறது
அவ்வபோது
அரங்கேறும்
இயற்கையின்
கோரத் தாண்டவத்தில்