Sunday, March 20, 2011

ஒரு சாலை ஒரே சத்தம்

ஒவ்வொரு நாளும் 
பிறக்கிறது 
ஒரு நாள் 
சோதனையாக
 
ஒவ்வொரு நாளும் 
முடிகிறது 
வாழ் நாள் 
சாதனையாக  

உண்ணும் 
உணவில் கூட 
போராட்டம்
உண்பவன் 
யார் என்பதில் 

உண்டு 
முடித்தப் பின்னும் 
தகராறு 
உண்டது 
எது என்பதில் 

தண்ணீரும் 
மண்ணோடு சேர்ந்து 
மனம் நோக
செய்வதுண்டு
 
தென்றல் காற்று 
கூட  
தீண்ட தாகாமல் 
போவதுண்டு 

நாளை என்ற 
நம்பிக்கை மட்டுமே 
இன்றைய துன்பத்தை 
இன்பமாக்கும் மருந்து
 
உயிர் என்ற 
பொய் மட்டுமே 
உடல் ஊனத்தை 
மெய்யாக்கும் சிரத்தை 

ஒரே இடத்தில் 
நின்று
உயிர் வாழ 
உரிமை பெற்ற 
மரம் 
உயர்வான பிறப்பு 

ஓர் இடத்தில் 
நிற்க 
நேரம் இன்றி 
சுற்றி திரியும் 
என் 
சோகத்தை நினைத்தால் 

நிலையில்லாத வாழ்வில் 
நிலையானது 
நிலையில்லாத மாற்றம் 
மட்டுமே 

என் 
கவச குண்டலம் 
நான் 
சுத்தப் படுத்தும் 
என் கழிவறைகள் 

என் 
போதாத காலம்   
நான் 
பதிவு செய்யாத 
என் 
பிறப்பும் இறப்பும் 

கரை 
கட்டி தேக்கப்பட்ட
நீர் - பாசனம் 
செய்யப்பட வேண்டும் 
இல்லையேல் 
பாசி பிடித்துவிடும் 

வற்றாமல் ஓடும் 
காற்றாற்று வெள்ளம் 
வேலியிட்டுக்
கொள்வதில்லை 

என்றாவது 
வற்றிப் போனாலும் 
வேதனைப்பட்டு 
கொள்ளவதில்லை

விழுகிறேன் எழுகிறேன் 
அறிகிறேன் 
மீண்டும் விழலாம் 
மீண்டு எழலாம் 

மாண்டு 
போகும் வரை 
மாறி மாறி 
தேறி கொள்ளும் 
வாழ்க்கை 

முடிந்தவரை     
முயற்சி செய் 
உன்னால் 
முடிந்தவர்களுக்காக !

No comments:

Post a Comment