Tuesday, March 22, 2011

துளிகள் - 8

கற்பு

உண்டென்றால் 
உன் உடையின் 
நூலிழை கூட 
நாணப்படும் 

இல்லை என்றால் 
என் எச்சிலில் 
நனைவது கூட
நாகரிகம்  !


வெட்கம் 

புதுமைப் பெண்ணின் 
பெருமை கண்டு 
குறுகி நிற்கும்  
ஆடையின் 
அளவில் மட்டும் 

புரட்சி பெண்ணின் 
வீரம் காக்க 
நிறைந்து நிற்கும் 
ஆடையின் 
நெருக்கத்தில் மட்டும் ! 


பார்வை
 
என்னை 
நீ பார்க்கையில் 
உன்னை 
நான் பார்க்கையில்
அர்த்தம் புரிகிறது 

அவள் 
என்னை பார்க்கையில்
நான் 
அவளை பார்க்கையில்
அர்த்தம் புரியவில்லை !


அவள் 

என்
வினாடிகளில்
பங்கு கேட்கும்
அதிகாரம் பெற்றவள் !


நொடி 

என்
வயது வகுபடும்
அதிகபட்ச நேரம் !

No comments:

Post a Comment