Thursday, March 10, 2011

துளிகள் - 7

நான் பிறந்ததும் 
என் வாழ்வின் 
மணித்துளிகள்
இறக்க 
ஆரம்பித்துவிட்டன !

---------------x--------------------

விதியை 
மதியால் வெல்வதும் 
என் 
தலைவிதி தான் !

---------------x--------------------

வெறும் காகிதம் 
நான் 
எனக்குள் எழுதப்படும் 
கருப்பு வண்ண 
எழுத்துக்களே 
என் வாழ்க்கை !

---------------x--------------------

தோற்றப் பின்னும் 
வாழ்க்கை இருக்கிறது 
மீண்டும் 
தோற்பதற்கு
வாய்ப்பு இருக்கிறது !

---------------x--------------------

வாழ்வதற்காக 
பிறப்பவர்களை விட 
பிறந்ததற்காக 
வாழ்பவர்கள் அதிகம் !

---------------x--------------------

உன் உழைப்பின் 
ஊதிய உயர்வான 
ஒரு ரூபாய் 
உல்லாசத்தின் 
ஒரு படியில் 
விழுவதால் தான் 
இல்லாதவன் மடியில் 
இன்னமும் ஏழ்மை !

---------------x--------------------

உன்னால் 
கவனிக்கப் படாதவன் 
தான் 
பின்னாளில் 
உன் முன்னால்
நிற்கிறான் 

அவன் 
எதிராளி அல்ல 
உன்னால் 
ஏமாற்றப்பட்ட 
ஒரு ஏமாளி !

---------------x--------------------

பந்தைய களத்தில் 
உன்னை 
வெல்லப் போகிறவன் 
உன்
பக்கத்து வீட்டுக்காரன் !
 
---------------x--------------------

உண்மையில் 
உணவுப் பஞ்சமா 
உறைவிடம்
பற்றாக்குறையா 

ஏன் நமக்குள் 
இத்தனை போட்டி 
தான் என்ற 
தற்பெருமையே காரணம் !

No comments:

Post a Comment