Thursday, March 10, 2011

எந்தையே - 8

உன் நினைவுகள் 
வரும் போது
என் உறக்கம் 
மறக்கிறேன் 

உன் கனவுகளை 
எண்ணும் போது 
நான் உலகை 
வெறுக்கிறேன் 
 
அகிம்சையை
போதித்து சென்றாய் 
உன்னை 
இம்சித்த உலகிற்கு
 
அன்பை 
புகட்டிச் சென்றாய் 
உன்னிடம் 
வம்பு செய்தவற்கு 

ஏழ்மையை 
பகிர்ந்து கொள்ளாமல் 
ஏழ்மையிலும் 
பகிர்ந்து உண்டாய் 

அதர்மத்தை 
கையில் எடுக்காமல் 
தர்மத்தை 
காப்பாற்ற துணிந்தாய் 

உறவுகள் 
ஏறி செல்ல 
ஒரு 
ஏணியாய் இருந்தாய் 

உன் மகனும் 
பெயர் சொல்ல 
இன்று 
தோணியாய் ஆனான்

நீ 
தோற்றது போல் 
ஒரு மாயை 
நான் 
தேற்றிக் கொள்ளும் 
ஒரு காயம் 

உன்னோடு முடிவது 
உன் கனவு 
என்றால் 
என் பிறப்பின் 
இரகசியம் என்ன 

இந்த உயிர் 
உனக்கானது 
இந்த உடல் 
உனக்கானது 

எந்தன் அறிவு 
உனை சார்ந்தது 
எந்தன் ஆற்றல் 
உன்னை போன்றது 

என் 
முதல் எதிரி 
நீ 
விட்டு சென்ற 
மிச்சம் 

உன் 
முதல் நண்பன் 
நான் 
பற்றிக் கொள்ளும் 
சொந்தம் 

நான் பிறக்காத 
உன் 
முதல் பகுதி 
உனக்கான 
என் விருப்பம் 

நான் பிறந்த 
உன் 
இரண்டாம் பகுதி 
எனக்கான 
உன் விருப்பம்

இரண்டிலும் இருவருமே 
தோற்றுப் போனோம் 
இருந்தும் 
இன்னமும் இருக்கிறது 
தூற்றுவார் நெஞ்சம் 

இரத்தமும் சதையுமாய் 
என்னோடு இருப்பதால் 
இருவரும் 
இணைந்தே போராடுவோம் 
போற்றுவார் போற்ற !

No comments:

Post a Comment