Monday, March 28, 2011

துணிவு கொள்

மனமே 
துணிவு கொள் 
மலை அல்ல 
மடு என்று 
பணியச் சொல்
 
நினைவில் 
நிறுத்திக் கொள்
நீர் அல்ல 
நெருப்பு என்று 
நெஞ்சை 
நிமிர்த்தி செல் 

கொஞ்சம் 
அசந்தால் கூட
உனக்கு 
கொல்லி வைக்கும் 
உலகம் 

கொஞ்ச 
நேரத்திற்கு ஒருமுறை 
உன்னை
கிள்ளி பார்த்து 
தெளியும்

எங்கே
உன் 
போர் வாள்
எடுத்து 
வைத்துக் கொள் 
உலகமே 
ஒரு போர்க்களம்
 
எங்கே 
உன் 
பாதுகாப்பு கேடயம் 
கையில் 
எடுத்துக் கொள் 
வாழ்க்கையே 
ஒரு போராட்டம் 

அஞ்சி நடப்பவன்
தனக்கே தான்
அந்நியம் ஆவான்
என்றும்
கெஞ்சி வாழ்பவன்
உலகுக்கே உன்னை
எதிரி ஆக்குவான்

பயம்
உனக்கு நீயே
புகட்டிக் கொள்ளும்
நஞ்சு

பணிவு
தனக்கு தானே
அடித்துக் கொள்ளும்
சவுக்கு

உனக்கு
யாரும் இல்லையென
எண்ணாதே
உனக்காக
நீயே உள்ளாய் 
என்பதே உண்மை

துணைக்கு 
சொந்தம் இல்லையென 
சோர்ந்திடாதே
தூண் போன்று 
தோள்கள் இருப்பதே 
சுமை தூக்கத்தான்

ஒவ்வொரு நொடியும் 
கொடுத்துக் கொண்டிரு 
ஊக்க மருந்து 
இல்லையேல் 
உள்ளம் 
ஏங்கி ஏங்கியே     
தூங்கி போய்விடும் 
நிரந்தரமாய் !


No comments:

Post a Comment