உன்னை
என் இறைவனாக்கி
தினமும்
எண்ணி உருகுகிறேன்
என்னை
உன் பக்தனாக்கி
நான்
நலம்பெற வேண்டுகிறேன்
இன்னமும்
நான் மாறவில்லை
உன்னிடமே
வரம் கேட்கிறேன்
என்னையும்
நீ மறக்கவில்லை
எனக்காகவே
தவம் செய்கிறாய்
என்னை
அறிமுகப்படுத்தினாய்
உன்னை
தெரிந்தவர்களிடம்
எனக்கு
முகவுரை கூறினாய்
உனக்கு
முடிவுரை எழுதி
உன்
கரம் பற்றி
வந்த என்னை
என்
கரம் உயர்த்தி
இளவரசன் என்றாய்
என்
சிரம் தாழ்த்தி
ஏற்கும் முன்னே
உன்
சிரம் சாய்த்து
சிலையாகி போனாய்
எண்ணி வியக்கிறேன்
உன்
பாத சுவடுகள்
இன்னமும்
எனக்காக பயணிக்கின்றன
கண்ணீர் விடுகிறேன்
அவை
காட்டும் சொந்தங்கள்
எனக்காக
தோள் சாய்க்கின்றன
அறுப்பத்தொரு ஆண்டுகள்
நிரந்தரமின்றி
ஊசலாடி இருக்கலாம்
உன் வாழ்க்கை
அடங்கி விடாத
அதன்
அதிர்வுகள் போதும்
அடுத்த தலைமுறைக்கு
உலகுக்கான
என்னை உருவாக்கினாய்
எனக்கான
உலகை உருவாக்கினாய்
இரண்டையும்
ஒன்று சேர்க்கும்
முன்பே
இறைவனாகி போனாய்
இன்று
இணை கோடுகளாய்
என்று
இணைவோமென்று தெரியாமல் !
என்
ReplyDeleteசிரம் தாழ்த்தி
ஏற்கும் முன்னே
உன்
சிரம் சாய்த்து
சிலையாகி போனாய்