Sunday, April 3, 2011

எந்தையே - 10

ஆண்டு அனுபவித்து
அமைதியாக
கண்கள் மூடி
கடந்த கால
நினைவுகளில் ஆழ்ந்திருப்பாய்

உன் பேரன்
ஓடி வந்து
நிகழ்காலத்தின்
அவசியத்தை
நினைவு படுத்துவான்

பெற்ற மகனிடமே
முறைத்து கொண்டு
பெரிதாக
வெறுத்துக் கொள்வாய்

உற்றார் உறவினர்களிடம்
உன் மகனுக்கு
அனுகுமுறை
சொல்லிக் கொடுப்பாய்

தள்ளாத வயதில்
தள்ளாடி நடந்து
பொல்லாத உலகத்திடம்
புது பட்டம்
பெற்றுக் கொள்வாய்
கிழவன் என்று

இல்லாதவன் போல்
எளிமையாக இருந்து
இருப்பதையும் பங்கிட்டு
உனக்கே நீ
பகிர்ந்தளித்துக் கொள்வாய்
இன்னொரு வேளைக்கு 

அன்னையிடம்
அடிக்கடி
முறைத்துக் கொள்வாய்

அனைவரிடமும்
அதிகமாக
கடிந்து கொள்வாய்

இறுதியாக
உனக்கு நீயே
உறுதி
செய்து கொள்வாய்

இது
என்றும் திருந்தாத
புது
உலகம் என்று

என்
அன்றாட கனவுகளில்
அதிகமாக
வந்து போன
உன்
இன்பம் பொங்கும் 
எதிர்காலம்
இது தான் 

எப்படி
அறுக்க பட்டது
இந்த நினைவுகள்

யாரால்
நொறுக்கப் பட்டது
என் கடமைகள்

இன்று
அறுபது வயது
கடந்தவரை கண்டால்
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்

உங்கள்
மூத்த குடிமக்கள்
சமூகத்தில்
ஒருவருக்கு
இடம்
மறுக்கப் பட்டுவிட்டதே
என்று !









1 comment:

  1. உங்கள்
    மூத்த குடிமக்கள்
    சமூகத்தில்
    ஒருவருக்கு
    இடம்
    மறுக்கப் பட்டுவிட்டதே
    என்று !

    ReplyDelete