நான்
தூக்கத்தில் சிரிக்கிறேன்
என்
துக்கத்திலும் ரசிக்கிறேன்
காதல்
என்பது கொடுமை
காதலன்
என்பவன் அடிமை
என்
இரவுகள்
என்னை இம்சிக்கின்றன
நீ
இல்லையென்றால்
என்
பகல்கள் கூட
என்னை பரிகாசிக்கின்றன
உன்னை
பார்க்கவில்லை என்றால்
இளமை
முறுக்கேறும் நேரத்தில்
உன்
நினைவுகளில்
சறுக்கிவிடுகிறேன்
கடமை
அரங்கேற்றும் காலத்தில்
உன்
கனவுகளில்
கருகிவிடுகிறேன்
எங்கோ
தூர தேசத்தில்
நீ
இருக்கின்றாய்
இங்கே
உன்னை
துரத்தி பிடிக்க
நான்
நினைக்கின்றேன்
தெளிந்த போதெல்லாம்
தேடுகிறேன்
எந்த வழியாக
எனக்குள்
வருகின்றாய் என்று
தொலைந்த போதும்
துளாவுகிறேன்
எனக்குள்
திறந்த வழி
எது என்று
என் கட்டிலில்
உன்
நினைவுகள்
கட்டப்பட்டு
கிடக்கின்றன
என்
அறை முழுவதும்
உன்
ஆசைகள்
அடைக்கப்பட்டு
கிடக்கின்றன
என்
சுவாச பையில்
மூச்சுக் காற்றோடு
அடைத்து நிற்கின்றது
உன்
முக தரிசனம்
என்
உணவுக் குழியில்
சீரண சக்தியோடு
செரிமானமின்றி எரிகிறது
உன்
காதல் நினைவுகள்
அவ்வ போது
புரை ஏறுகிறது
அடைச்சலும்
எரிச்சலும்
உடைந்து போய்
அவசரமாய்
கண்ணீர் வருகிறது
முகமும்
நினைவும்
முற்றி போய்
உலகிலேயே
அதிகமாக
அடிமைப்பட்டு
கிடப்பவனும்
நான் தான்
ஒவ்வொரு நாளும்
உன்
நினைவுகளிடமிருந்து
விடுதலை பெற
போராடி போராடி
தோற்று போகிறவனும்
நானே தான் !
No comments:
Post a Comment