நான் நினைப்பது
எதுவும்
நடப்பதில்லை என்று
என்னை
அடித்து சொன்னாய்
நீ ஆசைப்பட்ட
வாழ்க்கை
அமையவில்லை என்று
உன்
அடிகளில் உணர்ந்தேன்
சம்சாரி
வாழ்வை கூட
ஒரு
சந்நியாசி போல்
வாழ்ந்தவன் நீ
சம்சார
மகிழ்வை கூட
ஒரு
சாணக்கியம் போல்
செய்தவன் நீ
மனைவி
மக்களை விட
வேறு
சாதனைகள் எதுவும்
செய்யாதவன் நீ
எங்களை
காத்து அருள்வதை
பெரும்
கடமையாக எண்ணி
சாதித்தவன் நீ
ஊருக்காக
ஒருமுறை வாழ்ந்தாய்
உறவுக்காக
ஒருமுறை வாழ்ந்தாய்
மனைவிக்காக
ஒருமுறை வாழ்ந்தாய்
மக்களுக்காக
ஒருமுறை வாழ்ந்தாய்
உனக்காக
ஒரே ஒருமுறை
வாழ
ஆசைப்பட்டாய்
உன்
பெற்ற கடனை
முடித்து விட்டு
பிள்ளை
அரவணைப்பில்
பெருமை கொள்ள
உலகம்
புரிந்து
கொள்ளவில்லை
உன்
பெருமையை
உறவுகள்
அறிந்து
கொள்ளவில்லை
உன்
அருமையை
இறுதி வரை
எல்லோரும் போற்ற
விரும்பி
எண்ணற்ற தூற்றல்கள்
பெற்றாய்
அப்பா
நீ ஒரு
அப்பாவியாய்
இருந்தாய்
ஆயிரக்கணக்கான
பாவிகள் மத்தியில்
உன்
நன்மைகள் யாவும்
அபகரிக்கப் பட்டு
தீமைகளாக
திரிக்கப் பட்டுவிட்டன
இன்று
திரிசங்கு நிலையில்
இருக்கிறது
உன் உண்மை
உண்மையை காத்திடவே
நானொரு
சொர்க்கம் அமைப்பேன்
இந்த
உலகம் உணர !
சம்சாரி
ReplyDeleteவாழ்வை கூட
ஒரு
சந்நியாசி போல்
வாழ்ந்தவன் நீ