அவ்வபோது உடைகிறேன்
அவசரமாய் அழுகிறேன்
எப்படி
உன்னை இழந்தேன்
என்று
இன்றும் யோசிக்கிறேன்
என்னோடு
நீ இருக்கிறாய்
என்று
இன்னும் நம்புகிறேன்
பார்க்க
எண்ணும் போதும்
உன் குரல்
கேட்க
எண்ணும் போதும்
நீ
இல்லை என்ற
உண்மை
நெஞ்சில் ஈட்டியாக
பாய்கிறது
எரியும்
உன் சிதை
இன்னும்
அணையவில்லை
என் இதயத்தில்
கருகிய
உன் உடல்
இன்றும்
கூறாகி நிற்கிறது
என் உள்ளத்தில்
உன்னை
மறந்து போன
உலகத்தை
நினைத்து பார்க்க
பிடிக்கவில்லை
உன்னை
நினைத்து வாழும்
உள்ளத்தை
நெருங்கி நிற்க
முடியவில்லை
வெறும்
கூட்டு கணிதமாய்
என்
வாழ் நாள்
பெரும்
பிழை பட்ட
சூத்திரமாய்
என்
மனக் கணக்கு
மனம் விட்டு
அழுகிறேன்
என்
மனக் கவலையில்
உன்னை
மறந்து விட்டேனே
என்று
உன்
மகனாக இருந்தும்
உன்னை
இழந்து விட்டேனே
என்று !
உன்
ReplyDeleteமகனாக இருந்தும்
உன்னை
இழந்து விட்டேனே
என்று !