Wednesday, November 30, 2011

கழிவுகள்

ஆறாத வடு
என்னை
ஆரத் தழுவிக்  
கொண்டு சிரிக்கிறது

நேற்றைய நிகழ்வுகளை 
இன்றைக்கு  
நினைத்து பார்க்க
சொல்லி வெறிக்கிறது

வெறும் குப்பை
பெருகி கிடப்பதால்
எனக்கு
பொறுக்க தோன்றுகிறது

அறுசுவை பண்டம்  
அழுகி கிடப்பதால்
அருகில்
ஈக்கள் மொய்க்கின்றன

எரிக்க வேண்டும்
இல்லை
புதைக்க வேண்டும்
இறந்தவை அனைத்தையும்

இல்லையேல் -

இருப்பவை
துருவி  துருவி
துருபிடிக்க  
செய்து விடும்

அழுகியவை
ஒழுகி ஒழுகி
புழுபுழுத்து
போய் விடும்

புரையோடி கிடக்கிறது
எண்ணற்ற  புண்கள்
சிறைபட்டு கிடக்கிறது
கணக்கற்ற மனங்கள்  

துருக்களும்
புழுக்களும்
தொல்லை தர 
தொடங்கி விட்டன

வீதியில் போட்ட
எச்சில் இலையை  
வாசலில் எறியும்
தெரு நாய்கள் 

தெருவில் கலக்கும்
சாக்கடை கிருமியை
இரத்தத்தில் ஏற்றும்   
கொசுக்களின் விளையாட்டு 

கழிவுகள்
கழிக்கப் பட
வேண்டியவை அல்ல
அழிக்கப் பட
வேண்டியவை

ஏழைக்கும் 
எதிரிக்கும்
கழிவுகள்
ஊட்டப்படுவதால் தான்
உலகம்
அழிவை நோக்கி
சென்று கொண்டிருக்கிறது !

No comments:

Post a Comment