உடைந்து விழும்
உன்
உயிரின் வாழ்வை
ஒரு
சில் வண்டின்
ஓசை
உயிர்த்தெழ செய்யும்
கவிழ்ந்து விழும்
உன்
கனவின் ஆசையை
ஒரு
கண்ணாடி துண்டு
காப்பாற்றி விடும்
கடிகார
சத்தம் கூட
கவலைகள்
மறக்கச் செய்யும்
காதின் ஓரத்தில்
காகித
அசைவு கூட
இசைவுகளை
இயற்றி விடும்
இதய கூட்டுக்குள்
நீரின்
தொண தொணப்பு
நிலத்தின்
கலங்களின் மேனியை
நெகிழச் செய்யும்
காற்றின்
சுறு சுறுப்பு
கரையின்
ஓரங்களின் ஆரத்தை
தூரமாக்க துடிக்கும்
ஒரு
பருந்தின் அந்தரத்தில்
பறக்க விடப்படும்
அற்ப எண்ணங்கள்
ஒரு
குரங்கின் வாலில்
பட்டாசை கொளுத்தும்
குறும்பு சிந்தனைகள்
நடக்க
சாத்தியப் படாத
நொண்டி கனவுகள்
வண்டி கட்டும்
வாழ்க்கை பயணத்திற்கு
இருட்டு பாதையில்
குருட்டு நம்பிக்கை
தெரு விளக்கை
ஏற்றி விடும்
திருவிழா தோரணம்
கட்டி விடும்
மிரட்டும் உலகில்
முரட்டு குணங்கள்
திருட்டு தனங்களை
விரட்டி விடும்
திறமை அனைத்தையும்
வளர்த்து விடும்
எரிந்து விழும்
வரை
ஒரு நட்சத்திரம்
எரிந்து
கொண்டே இருக்கும்
விழுந்து எழும்
வரை
மனிதனின் வாழ்க்கை
விழுந்து
கொண்டே இருக்கும்
அகல் விளக்கின்
திரியை சுடும்
நெருப்பு தான்
ஒளி கொடுக்கும்
அடி மனதில்
வலியை தரும்
கேள்வி தான்
வெற்றியின்
விடையை கொடுக்கும் !
உன்
உயிரின் வாழ்வை
ஒரு
சில் வண்டின்
ஓசை
உயிர்த்தெழ செய்யும்
கவிழ்ந்து விழும்
உன்
கனவின் ஆசையை
ஒரு
கண்ணாடி துண்டு
காப்பாற்றி விடும்
கடிகார
சத்தம் கூட
கவலைகள்
மறக்கச் செய்யும்
காதின் ஓரத்தில்
காகித
அசைவு கூட
இசைவுகளை
இயற்றி விடும்
இதய கூட்டுக்குள்
நீரின்
தொண தொணப்பு
நிலத்தின்
கலங்களின் மேனியை
நெகிழச் செய்யும்
காற்றின்
சுறு சுறுப்பு
கரையின்
ஓரங்களின் ஆரத்தை
தூரமாக்க துடிக்கும்
ஒரு
பருந்தின் அந்தரத்தில்
பறக்க விடப்படும்
அற்ப எண்ணங்கள்
ஒரு
குரங்கின் வாலில்
பட்டாசை கொளுத்தும்
குறும்பு சிந்தனைகள்
நடக்க
சாத்தியப் படாத
நொண்டி கனவுகள்
வண்டி கட்டும்
வாழ்க்கை பயணத்திற்கு
இருட்டு பாதையில்
குருட்டு நம்பிக்கை
தெரு விளக்கை
ஏற்றி விடும்
திருவிழா தோரணம்
கட்டி விடும்
மிரட்டும் உலகில்
முரட்டு குணங்கள்
திருட்டு தனங்களை
விரட்டி விடும்
திறமை அனைத்தையும்
வளர்த்து விடும்
எரிந்து விழும்
வரை
ஒரு நட்சத்திரம்
எரிந்து
கொண்டே இருக்கும்
விழுந்து எழும்
வரை
மனிதனின் வாழ்க்கை
விழுந்து
கொண்டே இருக்கும்
அகல் விளக்கின்
திரியை சுடும்
நெருப்பு தான்
ஒளி கொடுக்கும்
அடி மனதில்
வலியை தரும்
கேள்வி தான்
வெற்றியின்
விடையை கொடுக்கும் !
No comments:
Post a Comment