அன்பு நண்பர்களே
எனது இடைவிடாத வேலை பளு என் எழுத்து பணியில் சிறிது இடைவெளியை ஏற்ப்படுத்தி விட்டது . இப்போது எனக்கு ஒரு சின்ன வருத்தம் என்னவென்றால் என் தந்தைக்கு அறுபத்தியொரு கவிதைகள் எழுதி புத்தகமாக வெளியிட ஆசைப்பட்டேன் . ஆனால் நேரம் குறைவாக இருப்பதால் அதன் எண்ணிக்கையை இருபத்தி எட்டாக குறைத்து விட்டு ( கண்ணீர் முத்துக்கள் 28 ) இதர தத்துவ கவிதைகளை இணைத்து ( கற்ற தத்துவங்கள் 61 ) கண்ணீர் அஞ்சலியுடன் ( அஞ்சலி 1 ) கட்டளைகள் பத்தாக ( கட்டளைகள் 10 ) என் முதல் தொகுப்பை வெளியிடும் வேலைகளை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க நினைக்கிறேன் .
அதனால் உங்கள் அனைவருக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் , நீங்கள் தான் எனது முதல் விமர்சகர்கள் , உங்களின் பங்களிப்பையும் நான் எதிர்பார்க்கிறேன் . என்னால் முடியும் என்றால் உங்கள் அன்பு கரங்களின் ரேகை அச்சுகளையாவது என் புத்தகத்தில் வெளியிட விரும்புகிறேன். அதற்கு
1. உங்களுக்கு பிடித்த என் கவிதைகளை வரிசைப்படுத்தி உங்கள் கருத்துகளை, வாழ்க்கை நினைவுகளுடனான என் கவிதை தாக்கங்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். நம் அழகு தமிழில் மட்டும் எழுதி அனுப்புங்கள். ரத்தின சுருக்கமாக எழுதி அனுப்புங்கள் . தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.
2. என் கவிதைகளுக்கான கருத்துகள் நிறைந்த புகைப்படங்கள் உங்களிடம் இருக்கும் என்றால் அதைபற்றிய வில்லங்கம் இல்லாத (copy write issue ) விளக்கங்களுடன் எனக்கு அனுப்புங்கள் . எந்த கவிதைக்கான புகைப்படம் என்பதை குறிப்பிட்டு அனுப்புங்கள். தேர்ந்தேடுத்தப் பின் உங்கள் அனுமதி பெற விரும்புகிறேன் புத்தகத்தில் வெளியிடுவதற்கு.
எனது email address: visvatamil@gmail.com
உங்கள் அனைத்து எண்ணங்களையும் எனக்கு மேலே குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்புகள் . எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் உங்கள் இனிய நண்பன்.
No comments:
Post a Comment